Hollywood Adventure Movies in Tamil Dubbed


Movies List :

1. Journey to the Center of the Earth

     2008 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதுவரை நாம் கனவு என்றே நினைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை இந்த படத்தில் காட்டியிருக்கார்கள். இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒருவர் தனது ஆராய்ச்சியை செய்வதற்காக எரிமலைக்கு அருகில் உள்ள ஒரு குகைக்கு போகிறார். அப்போது தவறுதலாக அங்கிருந்த ஒரு பள்ளத்தில் விழுகிறார். அதன்பிறகு இதுவரை நாம் கற்பனை என்று நினைத்துக்கொண்டிருந்த பூமியின் மையப்பகுதிக்கு போகிறார். அங்கேயே மாட்டிக்கொண்ட நமது ஹீரோ மீண்டும் எப்படி திரும்பி வருகிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் இதுவரை 2 பாகங்கள் வெளியாகியுள்ளது. அந்த இரண்டுமே சூப்பரா இருக்கும்.

2. National Treasure 

   இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் மறைந்துள்ள புதையலை எப்படி கண்டுபிக்கின்றனர் என்பதே இந்த படத்தின் கதை. மேலும் ஒவ்வொரு புதையலை தேடி போகும்போதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது நம்மளையே ஆச்சரிப்பட வைக்கும் அளவிற்கு படம் செம்மையா இருக்கும். இதுவரை இந்த படத்தில் இரண்டு பாகங்களை வெளியாகியுள்ளது. இரண்டையுமே ஒன்றன்பின் ஒன்றாக பாருங்கள். நல்ல இருக்கும்.

3. Night at the Museum

    இந்த படம் 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. இருந்தாலும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த படத்தின் கதை என்னவென்றால், படத்தில் வரும் ஹீரோ ஒரு அருங்காட்சியகத்திற்கு ( Museum ) இரவுநேர காவலராக வேலைக்கு போவார். அவர் போன முதல் நாளிலேயே அங்கிருந்த ஒரு ராஜாவின் கல்லறையில் இருந்து அற்புதமான தங்கம் அந்த அருங்காட்சியத்தில் இருக்கும் அனைத்து உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுத்துவிடும். அதாவது இரவு நேரத்தில் மட்டுமே எல்லா விலங்குகள் மற்றும் சிலைகளுக்கு உயிர் வந்துவிட்டு பகல் நேரத்தில் மீண்டும் சிலையாகவே மாறிவிடும். எனவே அந்த விலங்குகள் மற்றும் சிலைகளிடம் மாட்டிக்கொண்டு நமது ஹீரோ என்னவெல்லாம் பாடுபடுகிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்த படமும் இதுவரை இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது.

4. The Lord of the Rings 

    இந்த படம் 2001 ஆண்டுதான் வெளியானது. படத்தின் கதையில் ஹீரோ குள்ளர்கள் இனத்தை சேர்ந்தவராக இருப்பார். அப்போது அவருக்கு ஒரு மோதிரம் கிடைக்கும். மேலும் அந்த மோதிரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு துன்பம் மட்டுமே வந்துகொண்டிருக்கும். அந்த சாபத்தை போக்க அந்த மோதிரம் உருவாக்கப்பட்ட இடத்திலேயே அளிக்க வேண்டும். அதை ஹீரோ எப்படி அளிக்கிறார் என்பதே படத்தின் கதை. இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாகமும் குறைந்தது 4 மணிநேரமாவது ஓடிக்கொண்டிருக்கும். இருந்தாலும் கொஞ்சம்கூட போர் அடிக்கவே அடிக்காது.

மேலும் இதுபோன்ற படங்களின் கதையையோ அல்லது ஆங்கில படத்தின் கதையையோ தமிழ் மொழியில் படிக்க கீழே உள்ள Comment மூலம் சொல்லுங்கள்.